கோவை வனவிலங்குகள் மறுவாழ்வு மையத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார், மேலும் தற்பொழுது பத்தாயிரம் பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறார்.
வட கோவையில் உள்ள தமிழ்நாடு வனக் கல்லூரியில் தமிழ்நாடு வனப்படை நவீன மையமாகக்கல் மற்றும் ஆயுதங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக கோவை மாவட்டத்தில் சிறுமுகை பெத்தி குட்டையில் ரூபாய் 19.5 கோடியில் கட்டப்பட்டு உள்ள வனவிலங்குகள் இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையம், சாடிவயல் யானைகள் முகாம், தமிழ்நாடு வனத்துறை ஆவண காப்பகம், சேமிப்பகம் ஆகியவற்றை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

