பட்டுக்கோட்டை அருகே ராஜாமடம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் தொடர்ந்து 17 வருடங்களாக பணியாற்றிவரும் கல்லூரிப் பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி கல்லூரிப் பேராசிரியர்கள் உள்ளிருப்புப் போராட்டம் 17 வருடங்களாக பணியாற்றி வரும் கல்லூரிப் பேராசிரியைகளை தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த ராஜாமடத்தில் அண்ணா

பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் தொடர்ந்து 17 வருடங்களாக
பணியாற்றிவரும் பேராசிரியர்களுக்கு (சிஏஎஸ்) என்கிற பணி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் பதவி உயர்வு உரிய நேரத்தில் இதுவரை வழங்கப்படவில்லை. உடனடியாக பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

