மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவன் பலி…
திருச்சி செம்பட்டு கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் இவரது மகன் ராபின் ராய் (19). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.விஒசி. 3ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று வீட்டில் இருந்த ராபின் ராய் இரும்பு குழாயை தொட்டு உள்ளார்.அப்பொழுது எதிர்பாராத விதமாக இரும்பு குழாயிலிருந்து மின்சாரம் கசிந்து ராபின் ராய் மீது பாய்ந்தது. இந்த சம்பவத்தில் ராபின் ராய் மயக்கமடைந்தார் இதையடுத்து அவரை பெற்றோர் ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் குழுவினர் ராபின் ராய் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து அவரது தாய் சகாயமேரி ஏர்போர்ட் போலீசில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொன்மலையில் 4 மகள்களின் தந்தை மாயம்
திருச்சி,கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்தவர் மகேஷ் சுப்பிரமணியம் (49) இவருக்கு திருமணம் ஆகி களமாரி என்ற மனைவியும், நான்கு மகள்களும் உள்ளன. இந்நிலையில் கடந்த 5ம் தேதி வேலைக்கு சென்று வருவதாக கூறி சென்றி அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து களமாரி பொன்மலை போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் போலீசார் வழக்கு பதிவு செய்து மகேஷ் சுப்பிரமணியத்தை தேடி வருகின்றனர்.
போதை மாத்திரை விற்பனை செய்த ரவுடி உள்பட 2 பேர் கைது
திருச்சி நவ 27- திருச்சி கோட்டை ரெயில்வே ஜங்ஷன் ரோடு மேரிஸ் பாலம் அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது .
இதையடுத்து கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த பொழுது 2 பேர் சந்தேத்திற்கிடமாக சுற்றி திரிந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது இரண்டு பேரும் போதை மாத்திரை விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை செய்தபோது எடமலைப்பட்டி புதூர் ஆர் ஜே நகரை சேர்ந்த பாலமுருகன் (45)சுண்ணாம்பு காரத் தெருவை சேர்ந்த கணேஷ் (42) என்பது தெரியவந்தது இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இதில் பாலமுருகன் ரவுடி பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

