திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கார்த்திகேயபுரம் ஊராட்சியில் பஸ் ஸ்டாண்டின் பின்பகுதியில் உள்ள முட்புதரில் மாணவர் ஒருவர் சடலமாக இருப்பதாக திருத்தணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் இறந்த மாணவன் ஆந்திர மாநிலம் திருப்பதியில் தனியார் பார்மசி கல்லூரியில் படித்து வந்த சுதாகர் (22) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து மாணவரின் உயிரிழப்பிற்கான காரணம் என்ன?, வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்து உயிரிழந்தாரா? அல்லது யாரேனும் அடித்து கொலை செய்தனரா என திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்த கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.