Skip to content

கோவையை உலுக்கிய கொடூரம்…துப்பாக்கிக்சூடு ஏன்..? கமிஷனர் விளக்கம்!

  • by Authour

விமான நிலையத்தின் பின்புறம் உள்ள தனிமையான பகுதியில், நவம்பர் 1 இரவு (2025) சுமார் 11 மணிக்கு, ஒரு தனியார் கல்லூரி மாணவி தனது ஆண் நண்பருடன் காரில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, மூன்று இளைஞர்கள் திடீரென்று வந்து, ஆண் நண்பரை கடுமையாகத் தாக்கி விரட்டினர். பின்னர், மாணவியை தூக்கிச் சென்று, அருகிலுள்ள காட்டு பகுதியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடினர். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும், ஏற்படுத்தியுள்ளது.

மாணவி காயங்களுடன் தவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மாணவியின் ஆண் நண்பர், தாக்கப்பட்ட நிலையில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பீளமேடு போலீஸ் துரிதமாக வந்து, மாணவியை மீட்டு, உடனடியாக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மாணவியின் உடல்நிலை நலமாக இருந்தாலும், உடல் மற்றும் மனச்சிகிச்சை தேவைப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டோம். எனவே, சந்தேகத்திற்கு இடமானவர்கள் வெள்ள கிணறு பகுதியில் பதுங்கி இருந்தனர். போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற போது துப்பாக்கியால் சுட்டு பிடித்தோம்” எனவும் காவல் ஆணையர் விளக்கம் அளித்தார். ஆண் நண்பரும் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார், சம்பவ இடத்தில் ஆதாரங்கள் சேகரித்து, சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வந்த நிலையில், இன்று மூன்று பேரை சுட்டுப்பிடித்தனர்.

கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “சம்பவத்திற்குப் பிறகு 300 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை அடையாளம் கண்டோம். கைது செய்யப்பட்ட சதீஷ், கார்த்திக் சகோதரர்கள். குணா அவர்களது உறவினர். மூவரும் மது போதையில் திருட்டு வாகனத்தில் வந்து இந்த கொடூரச் செயலை செய்துள்ளனர். இவர்கள் மீது கொலை, திருட்டு உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இருவர் ஜாமீனில் இருந்தனர்” என்று தெரிவித்தார்.

வெள்ளக்கிணறு பகுதியில் போலீசாரைத் தாக்கியதும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மூவர் மீது IPC பிரிவுகள் 296(B) (கூட்டு பாலியல் வன்கொடுமை), 118, 324, 140, 309, 70 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து, ஆணையர் சரவணசுந்தர், பேசுகையில், “பாதிக்கப்பட்ட மாணவிக்கு உளவியல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க கடும் நடவடிக்கை எடுப்போம்” என்று உறுதியளித்தார்.  அதே சமயம், “48 மணி நேரத்தில் சிசிடிவி ஆதாரங்களுடன் குற்றவாளிகளைப் பிடித்தோம். நீதி கிடைக்கும்” என்று கூறினார்.

error: Content is protected !!