Skip to content

பாபநாசம் அருகே திமுக சார்பில் சமுதாய வளைகாப்பு ..

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக அரசு சார்பில் சமுதாய வளைகாப்பு அணிவிக்கும் நிகழ்ச்சியில் தாய்மார்கள் சீர்வரிசை தட்டுகளை எடுத்துக் கொண்டு வருகை புரிந்தனர்.

பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி

நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, கர்ப்பிணி பெண்களுக்கு ஆலோசனை வழங்கி, கர்ப்பிணி தாய்மார்கள் ஆயிரம் நாட்கள் ஒவ்வொரு நாளும் குழந்தையினுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் பெற்றெடுக்கக்கூடிய குழந்தைகள் நல்ல ஆரோக்கியமான பலமான

குழந்தைகளாக அறிவுள்ள குழந்தைகளாக உங்களுடைய குடும்பத்திற்கும் உங்களுடைய ஊருக்கும் நம்முடைய நாட்டிற்கும் நல்ல பயன் தரக்கூடிய குழந்தைகளாக பெற்றெடுக்க வேண்டுமன பேசி வாழ்த்துரை வழங்கினார்.

இதில் 100-க்கும் மேற்பட்ட கர்ப்பினி பெண்களுக்கு வளையல் காப்பு அணிவிக்கப்பட்டு சீர்வரிசை பொருள்களும், ஐந்து வகையான சத்துள்ள உணவுகளும் வழங்கப்பட்டது..

நிகழ்ச்சியில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வித்யபிரபா, மருத்துவர் தேவதர்ஷினி, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!