Skip to content

தன் மகன் உடல்நிலை குறித்து அவதூறு…. நெப்போலியன் போலீஸ் ஸ்டேசனில் புகார்….

  • by Authour
தனது மகன் தனுஷ் உடல் நிலை குறித்தும், அவரது மனைவி அக்‌ஷயா குறித்தும் சமூக வலைதத்தில் அவதூறு பரப்படுவதாக நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடிகர் நெப்போலியன் புகார் அளித்துள்ளார். ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நெப்போலியன். இவருக்கு தனுஷ்-குணால் என இரண்டு மகன்கள் இருக்கின்றன. இவரது மூத்த மகன் தனுஷ்  சிறுவயதிலேயே தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார். இதனிடையே சமீபத்தில் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷிற்கு திருமணம் நடைபெற்றது. தனுஷுக்கும் அக்‌ஷயா என்ற பெண்ணுக்கும் நெப்போலியன் தலைமையில் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடிகர் நெப்போலியன் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மானுவில், தனது மகன் தனுஷ் உடல் நிலை குறித்தும், அக்‌ஷயா குறித்தும் சமூக வலைதத்தில் அவதூறு பரப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மகன் தனுஷ் மற்றும் அவருடைய மனைவி அக்க்ஷயா இருவரும் நல்ல உடல் நலத்துடன் சேர்ந்து வாழ்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
error: Content is protected !!