கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் தற்காலிக தீயணைப்பு பயிற்சி மையத்தில் 141 வது தீயணைப்பு 90 நாள் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.
இதில் திருப்பூர், தஞ்சாவூர் ,விழுப்புரம், தூத்துக்குடி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களைச் சார்ந்த புதியதாக பணிக்கு சேர்ந்த 98 தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இவ்விழாவில் திருச்சி மத்திய மண்டல துணை இயக்குனர் குமார் பயிற்சி பெற்ற புதிய தீயணைப்பு
வீரர்களுக்கும் பாராட்டு தெரிவித்தார். மேலும் நிறைவு விழாவில் புதிய தீயணைப்பு வீரர்கள் பங்குபெற்ற கலை நிகழ்ச்சிகள் மற்றும் சாகச நிகழ்ச்சிகள்,தீ தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.
மேலும் அதனை தொடர்ந்து மூன்று தீயணைப்பு வாகனம் மூலம் மூவர்ண நிறத்தில் தண்ணீர் மூலம் மேலே பீச்சி அடித்து காட்சிப்படுத்தியது அங்கிருந்தவர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் காவலர் ஒருவரின் மகன் சினிமா பாடல்களுக்கு நடனமாடியும், தீயணைப்பு வீரர்கள் பாடல்கள் பாடியும், விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் இறுதியாக அனைவரும் குழுக்களாக சேர்ந்து உற்சாக நடனம் நடனமாடி உற்சாகமாகக் கொண்டாடினர். இதில் தீயணைப்பு துறை அதிகாரிகள், பயிற்சி பெற்ற வீரர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.