தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்,
வாடகை கட்டடங்களுக்கு லைசன்ஸ் பெற கட்டண உயர்வு மற்றும் பல்வேறு சட்ட விதிகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. அந்த சட்ட விதிகளின்படி கட்டிடங்களுக்கு லைசன்ஸ் எடுக்க முடியாத நிலை ஏற்படும் அபாயம் இருந்தது. இதனலியில் இது குறித்து தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றவுடன் அந்த சட்ட விதிகளை திரும்ப பெறுவதாகவும் புதிய சட்ட விதிகள் வகுக்கும்போது அதில் வியாபார சங்கப் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார் அதற்காக தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இன்று நாடு முழுவதும் சில்லறை வணிகம் அழிந்து கொண்டிருக்கிறது. அமேசான், பிளிப்கார்ட், ரிலையன்ஸ், டி மார்ட் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் சில்லறை வணிகத்தை கபழிகரம் செய்து வருகிறது. இதிலிருந்து வணிகர்களை மீட்பதற்கும் நாட்டின் பொருளாதாரத்தை பேணி பாதுகாக்கவும் தார்மீக போராட்டத்தை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கையில் எடுத்துள்ளது. தற்போது திருச்சி வயலூர் சாலையில் டி மார்ட் புதிய நிறுவனம் தொடங்குவதற்கு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது அதனை கண்டித்தும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆன்லைன் வர்த்தகம் மற்றும் உள்ளூர் சில்லறை வணிகத்தில் ஈடுபடுவதை கண்டித்தும் திருச்சியில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி போராட்டம் நடைபெறும்.
கார்ப்பரேட் நிறுவனங்களால் சில்லறை வியாபாரிகள் கடுமையாகu பாதிக்கப்பட்டு அவர்கள் கூலி வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். எனவே உள்ளூர் வணிகத்தை பாதுகாப்பதற்காக மத்திய மாநில அரசுகள் சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும்.
கார்ப்பரேட் நிறுவனங்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள்.
டி மார்ட் பண்ற நிறுவனங்களுக்கு மொத்த விற்பனை செய்ய தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது அதுவும் அந்த நிறுவனங்கள் நகர்புற பகுதிகளுக்கு வெளியே தான் இருக்க வேண்டும் என விதி உள்ளது. ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுடைய லாபியை பயன்படுத்தி விதிகளை மீறி வருகிறார்கள். இது போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களால் தமிழகத்தில் 20 விழுக்காடு சிறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கவனம் செலுத்தி தமிழக வியாபாரிகளை பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
கார்ப்பரேட் வணிக நிறுவனங்கள் பல்வேறு சூழ்ச்சிகளை செய்து மக்களை ஏமாற்றுகிறார்கள் அந்த சூழ்ச்சிகள் ஒழித்துக்கட்டப்பட வேண்டும்.
திருச்சியில் நடைபெறும் போராட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் இருந்து வியாபாரிகள் பங்கேற்பார்கள்.
டி மார்ட் போன்ற ஒரு நிறுவனம் ஒரு பகுதிக்கு வந்தால் அதை சுற்றியுள்ள 15 கிலோமீட்டர் தூரத்திற்கு உள்ள வியாபாரிகள் 8 முதல் 9 மாதங்களில் முழுமையாக காலியாகி விடுகிறார்கள் என்றார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது சங்கத்தின் பொதுச்செயலாளர் கோவிந்தராஜீலு உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.