ஜனநாயகத்தின் முதுகெலும்பான இந்திய குடிமக்களின் வாக்குரிமையை பறிக்கும் நோக்கில், இந்திய தேர்தல் ஆணையத்தோடு கூட்டுச் சேர்ந்து, வாக்குத் திருட்டில் ஈடுபட்டு ஆட்சி அமைத்து வரும் பாஜக – ஆர்.எஸ்.எஸ். முகத்திரையை, தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தோலுரித்து காட்டியுள்ளார். தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளையும், பா.ஜ.க. அரசின் சூழ்ச்சிகளையும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வண்ணம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக ” வாக்கு அதிகாரம் ” மாநிலம் தழுவிய மாநாடு வருகிற ஞாயிற்றுக்கிழமை 07.09.2025 அன்று, திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் மாநாட்டில், திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக 500 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநகர் மாவட்ட தலைவர், மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் அவர்களின் தலைமையில் மாநில பொதுச்செயலாளர் திரு. பெனட் அந்தோணிராஜ் முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்வில் மாவட்ட பொருளாளர் முரளி, முன்னாள் ராணுவ பிரிவு தலைவர் ராஜசேகர், கலைப்பிரிவு மாநில துணை தலைவர் பெஞ்சமின் இளங்கோ, கோட்ட தலைவர்கள் மலைக்கோட்டை வெங்கடேஷ் காந்தி, ஜங்ஷன் பிரியங்கா பட்டேல், மார்க்கெட் பகதுர்ஷா, புத்தூர் மலர் வெங்கடேஷ், உறையூர் பாக்யராஜ், பஞ்சப்பூர் மணிவேல், திருவனைக்கோவில் தர்மேஷ், வரகனேரி இஸ்மாயில், மகிளா காங்கிரஸ் அஞ்சு, கலைபிரிவு அருள், இலக்கிய பிரிவு பத்பநாதன், இளைஞர் காங்கிரஸ் விஜய் பட்டேல், ஆர்டிஐ பிரிவு கிளமெண்ட், ஊடக பிரிவு செந்தில், அமைப்பு சாரா பிரிவு மகேந்திரன், ஐடி பிரிவு டேவிட், வார்டு நிர்வாகிகள் வெங்கடேஷ், முருகன், செய்யது இப்ராஹிம், மூர்த்தி, நடராஜன், மாசிலாமணி, பண்ணீர், தமிழ் அழகன், நடராஜன், கருப்பையா, சம்பத், செபஸ்தியான், மகேஷ், வளன் ரோஸ், எழில் மற்றும் பல நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.