Skip to content

பேனர் வைப்பதில் தகராறு…காங்கிரஸ் நிர்வாகி வெட்டிக்கொலை

  • by Authour

கர்நாடக மாநிலம் சிக்மங்களூரு மாவட்டம் கமலேஷ்வரா பகுதியை சேர்ந்தவர் கணேஷ் கவுடா (38). காங்கிரஸ் நிர்வாகியான இவர் அப்பகுதி கிராம பஞ்சாயத்து உறுப்பினராக செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில், கணேஷ் கவுடா நேற்று இரவு கமலேஷ்வரா பகுதியில் உள்ள சாலையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், கணேஷ் கவுடாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த கொலை தொடர்பாக 3 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் கணேஷ் கவுடா கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த கொலையில் தொடர்புடைய மேலும் 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

error: Content is protected !!