தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் இடைவிடாமல் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதே போல் தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே புத்தூர் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட ஒரு மாதமே ஆன இளம் சம்பா தாளடி பயிர்கள் நீரில்

மூழ்கியுள்ளன. ஏற்கனவே கடந்த தின சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையால் பயிர்கள் மூழ்கிய நிலையில், தற்போது பெய்து வரும் தொடர் மழையால் பயிர்கள் அழுகிவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஏக்கருக்கு 30,000 செலவு செய்து பயிர்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட பகுதிகளை வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இப்பகுதியில் வடிகால் வாய்க்காலை முறையாக தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

