கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜூபிலி கிணறு வீதி சுப்பிரமணியம் சந்து பகுதியில் பூர்வீக வீட்டில் சித்ரா மற்றும் அவரது தாயார் லட்சுமி ஆகியோர் வசித்து வருகின்றனர் சித்ரா பொள்ளாச்சியில் உள்ள தனியார் துணிக்கடைக்கு பணிக்கு சென்று வருகிறார் சித்ராவின் மகள் சண்முகப்பிரியா

மருமகன் சிவக்குமார் பேரக்குழந்தைகள் கிருத்திகராஜ்,தீக்சன் ஆகியோர் குடும்பத்துடன் நோற்று வீட்டில் தங்கி இருந்தனர்
பொள்ளாச்சி பகுதியில் நோற்று முதல் காலை வரை தொடர்ந்து மழை பெய்து வருவதால் சித்ராவின் பூர்வீக வீடு பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு சிறு குழந்தைகள் உட்பட 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர், தகவல் அறிந்து வந்த மேற்கு காவல் நிலைய போலீசார் தீயணைப்பு மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து குடும்பத்தரை பத்திரமாக மீட்டனர்
பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் மற்றும் நகராட்சி ஆணையாளர் குமரன், வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டார். 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது .

