Skip to content

தொடர் மழை…மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 16,493 கனஅடியாக அதிகரிப்பு

மழை நிலவரத்தைப் பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக பாசனத்துக்காக அதிக தண்ணீர் திறக்கப்பட்டதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியது. நேற்று காலை அளவுப்படி, அணையின் நீர்மட்டம் 118.66 அடி என பதிவாகியுள்ளது.  இதற்கிடையில், கடந்த இரண்டு நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ததால், நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று வினாடிக்கு 9,828 கனஅடி வந்த நிலையில், இன்று அது 16,493 கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 15,000 கனஅடி, கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களுக்கு தலா 850 கனஅடி தண்ணீர் விடப்படுகிறது. வருகை நீரின் அளவு மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில், அணையில் 91.35 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

error: Content is protected !!