Skip to content

பிரதமர் வருகை…கோவை விமான நிலையத்தில் கட்டுப்பாடு…

  • by Authour

கோவை மாவட்டம் கொடிசியாவில் வருகிற 19ம் தேதி விவசாயிகள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்துப் பேசுகிறார். மேலும், இந்த மாநாட்டில் இயற்கை வேளாண் விஞ்ஞானிகளுடனும் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடவும் இருக்கிறார். இந்த மாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் 19ஆம் தேதி கோவை வர இருக்கிறார்.

இதன் காரணமாக மாநாடு நடைபெற உள்ள கொடிசியா மைதானம், கோவை விமான நிலையம், பிரதமர் நரேந்திர மோடி வந்துச் செல்லும் பாதை ஆகியவை தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து கோவை விமான நிலைய நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விமான நிலைய முனையம் மற்றும் ஒய் சந்திப்பு பகுதிக்கு முன்பு இரவு நேரத்தில் வாகனங்கள் நிறுத்தக்கூடாது. வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நள்ளிரவு முதல் காலை 5 மணி வரை நிறுத்தப்படும் வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு அபராத கட்டணம் வசூலிக்கப்படும். செவ்வாய்க்கிழமை (18.11.25) காலை 6 மணி முதல் புதன்கிழமை (19.11.25) மாலை 6 மணி வரை விமான நிலைய முனையம் மற்றும் ஒய் சந்திப்பு பகுதிக்கு முன்னால் வாகனங்களை நிறுத்தக் கூடாது.

அதேநேரத்தில் முனையம் முன்பு 3 நிமிடங்களுக்குள் பயணிகளை ஏற்றவும், இறக்கவும் செய்வதற்கு எந்த தடையும் இல்லை. செவ்வாய் மற்றும் புதன்கிழமை வரை பயணிகள் பயணிக்கும் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்துவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!