Skip to content

அரசு பஸ்சில் சர்ச்சை வாசகங்கள்.. மர்ம நபர்கள் கைவரிசை..

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பொது போக்குவரத்து சேவை நடைபெற்று வருகிறது. இதன் மூலம் குக் கிராமங்களில் இருந்தும் உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி மாநிலங்களுக்கு செல்லும் பல தரப்பட்ட பொதுமக்கள் பயண பயன்பாட்டுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மதுரை கோட்டத்தில் இருந்து இன்று பொள்ளாச்சி மார்க்கமாக அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. தேவாரம்,தேனி, பழனி பொள்ளாச்சி மார்க்கமாக கோவை செல்லும் அந்த குறிப்பிட்ட பேருந்தில் அரசு போக்குவரத்து கழகம் மதுரை என அரசால் பேருந்தின் பக்கவாட்டில், அச்சிடப்பட்ட இடத்தில் தமிழ்நாடா பிகாரா என மர்ம நபர்கள் சிலர் சிகப்பு மையால் எழுதி உள்ளனர்.இந்தப் பேருந்து பயணிகளோடு தொடர்ந்து அரசு ஊழியர்களால் இயக்கப்பட்டு வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!