உலகம் முழுவதும் இன்று திரைக்கு வந்துள்ள ரஜினியின் கூலி படத்தின் கதை சுருக்கம்: ஹாஸ்டல் வார்டனாக வருகிறார் ரஜினி. அவரது நண்பர் சத்யராஜ், நக்கல், நையாண்டியுடன் தனது வழக்கமாக நடிப்பை தந்துள்ளார். மிஸ்டர் பாரத்துக்கு(1986) பிறகு ரஜினியுடன் சேர்ந்துள்ளார் சத்யராஜ். சத்யராஜின் மகள் ஸ்ருதிஹாசன். நாகார்ஜூனா கடத்தல்காரர். விசாகப்பட்டினம் துறைமுகத்தில் தனது ஆட்களுடன் தங்க கடத்தலில் ஈடுபட்டு வருகிறார். அவரது கடத்தல் கும்பலில் சில கருப்பு ஆடுகள். அந்த ஆடுகளை நாகார்ஜுனா வேட்டையாடி வருகிறார்.அவருக்கு வலது கையாக சோபின் சாஹிர் இருக்கிறார். போலீசுக்கு தகவல் சொல்பவர்களை கொன்று, பின்னர் அந்த உடல்களை அப்புறப்படுத்துவதில் அந்த கும்பலுக்கு சிக்கல் வருகிறது. அந்த கூட்டத்தில் கூலியாக ஒரு உளவாளியும் வருகிறார்.
துறைமுகத்தில் கொல்லப்படுபவர்களின் உடல்களை தான் கண்டுபிடித்த நவீன எந்திரத்தின் மூலமாக சத்யராஜ் சாம்பலாக்கி அப்புறப்படுத்தி வருகிறார். ஒரு கட்டத்தில் சத்யராஜூம் கொல்லப்படுகிறார். தனது நண்பனை கொன்றவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்கிறார் ரஜினி. இதற்கு ஸ்ருதிஹாசன் துணையாக இருக்கிறார். இறுதியில் கடத்தல் கும்பலை வேட்டையாடுகிறார்.
கடத்தல்காரர் நாகர்ஜூனாவின் கூடாரத்துக்கே சென்று அவரை நேருக்குநேர் சந்திக்கிறார் ரஜினி. ரஜினி ஒவ்வொரு பிரேமிலும் முத்திரை பதித்துள்ளார். ஏஐ தொழில் நுட்பம் மூலம் 30 வருடங்களுக்கு முந்தைய ரஜினியை திரைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். ரஜினி ரசிர்களுக்கு இது செம விருந்து. ஒரே ஒரு பாட்டுக்கு வந்து குத்தாட்டம் போடும் பூஜா ஹெக்டே, தியேட்டரில் இருந்து வெளியே வந்த பிறகும் ரசிர்களின் உள்ளங்களை குத்தி கிளறுகிறார். நாகார்ஜூனா இந்த வில்லத்தனம் மூலம் புது அவதாரம் எடுத்திருக்கிறார். ஸ்ருதிஹாசன், சோபின் சாஹிர் அமீர்கான், உபேந்திரா ஆகியோரின் நடிப்பும் பாராட்டு பெறுகிறது.
ரஜினியின் ஸ்டைல், விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. படம் முழுவதும் ரசிகர்களுக்கு வேகத்தை கொடுக்கிறது. மொத்தத்தில் ரஜினி ரசிகர்களுக்கு நல்ல விருந்து.