திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த செண்பகவல்லி என்பவருக்கு சொந்தமான மாடு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள செப்டிக் டேங்கில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு விழுந்துள்ளது. இன்று காலை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுத்தம் செய்யும் பணியாளர்கள் செப்டிக் டேங்கில் விழுந்துள்ள மாட்டை பார்த்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன் காரணமாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சிறிது நேரம் போராடி மாட்டை பத்திரமாக மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர். இதன் காரணமாக சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. மேலும் இதுபோல் மாட்டை அவிழ்த்து விடும் மாட்டின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமோ கோரிக்கை எழுந்துள்ளது அதேபோல மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள செப்டிக் டேங்க் உடைந்த சிமெண்ட் தகரத்தாள் மூடப்பட்டுள்ளது அதனை முறையாக கான்கிரீட் போட்டு மூட வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.