புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட அசோக்நகர் பகுதியில் புதிதாக தொடங்கப்பட்ட எப்எல்2 மதுபானக் கடையை உடனடியாக மூட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்;ட் கட்சியின் மாநகர செயலாளர் எஸ்.பாண்டியன், மாநகரக்குழு உறுப்பினர்கள் பழ.குமரேசன், சித்ரா, கார்த்திக், சிஐடியு மாநகர ஒருங்கிணைப்பாளர் எம்.ஏ.ரகுமான் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து திங்கள்கிழமை அளிக்கப்பட்டுள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:-
புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி மற்றும் பட்டுக்கோட்டை செல்லும் பிரதான சாலை ஓரத்தில் அசோக்நகர் பகுதியில் சில தினங்களுக்கு முன்பாக எப்எல்2 மதுபானக் கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் மதுபானக் கடை திறக்கக்கூடாது என வலியுறுத்தி கடந்த 17.09.2024 மற்றும் 16.07.2025 ஆகிய தேதிகளில் அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை நடத்தி எதிர்ப்புத் தெரிவித் துள்ளனர்.

