தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி வேட்பாளராக பாஜக சார்பில் நிறுத்தப்பட்டு உள்ளார். இதற்கான தேர்தல் வரும் செப்டம்பர் 9ம் தேதி நடக்கிறது. தேர்தலில் எம்.பிக்கள் வாக்களித்து துணை ஜனாதிபதியை தேர்வு செய்வார்கள். பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி இல்லாத நிலையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் அவர் வெற்றி பெறலாம் என்ற நிலை உள்ளது. எனவே இன்று டெல்லியில் என்டிஏ கூட்டணி எம்.பிக்கள் கூட்டத்தில் சிபி ராதாகிருஷ்ணனை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. இதில் மத்திய அமைச்சர்கள் மற்றும் கூட்டணி எம்.பிக்கள் கலந்து கொண்டனர்.
சிபிஆரை ஆதரித்து வாக்களிக்குமாறு அப்போது பிரதமர் மோடி கூட்டணி கட்சி எம்.பிக்களை கேட்டுக்கொண்டார். முன்னர் சிபிஆருக்கு பிரதமர் மோடி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.