தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே திருவைக்காவூர் கொள்ளிடம் ஆற்றிலிருந்து, வேதாரண்யம் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக நல்லூர் வழி, வேதாரண்யம் பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந் நிலையில் பாபநாசம் அடுத்த நல்லூரில் உள்ள குடமுருட்டி ஆற்றின்
மீது அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு, வாரக் கணக்கில் குடிநீர் விரையமாகிறது. மேலும் குடி நீர் செல்லும் குழாய் பாசி படிந்துள்ளது. எனவே உடன் மாவட்ட நிர்வாகம் தலையிட அப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.