Skip to content

சாத்தூர்…. பட்டாசு ஆலையில் வெடி விபத்து…..3 பேர் உடல் சிதறி பலி

விருதுநகர் மாவட்டம்  சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டி என்ற கிராமத்தில்  அச்சங்குளத்தை சேர்ந்த சகாதேவன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இன்று காலை அங்கு பணியை தொடங்கியபோது திடீரென  வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 3 அறைகள் இடிந்து தரைமட்டமானது. அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 3 பேர் உடல் சிதறி அந்த இடத்தி்லேயே இறந்தனர்.  மேலும் பலர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக  ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள், வருவாயத்துறை அதிகாரிகள், போலீசார் விபத்து நடந்த ஆலைக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!