Skip to content

சிஎஸ்கே வெற்றி….ஹர்பஜன் வித்தியாசமான ட்வீட்

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று  சென்னையில் நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் மோதின. சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 7 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் லக்னோ அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லீக் சுற்றின் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்த நிலையில், லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

“சார் ரிலீஸ் ஆகியிருக்குற பத்துதல பாயும், விடுதலை வியக்க வைக்கும்ன்னு ரிவ்யூ எழுதிருப்பாங்க. அது கூட தல டோனி இந்த முறை ஐ.பி.எல் கோதாவுல பந்தயம் அடிக்கறது உறுதின்னும் எழுத சொல்லுங்க. சி.எஸ்.கே கூட விளையாடுறதும்,ஆபத்து கிட்ட ஆதார் கேக்குறதும் ஒன்னு.” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!