கடலூரில் உள்ளது கிருஷ்ணசாமி மேல்நிலைப்பள்ளி, இந்த பள்ளிக்கு சொந்தமான வேன் தினமும் காலையில் அந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சென்று மாணவ மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வருவது வழக்கம்.
அதன்படி இன்று காலை டிரைவர் சங்கர், வேனில் குழந்தைகளை அழைத்துக்கொண்டு செம்மங்கும்பம் ரயில்வே கேட் பகுதிக்கு வந்தார். வேனில் 10 மாணவ, மாணவிகள் மட்டுமே இருந்தனர். மற்ற மாணவர்களை அழைக்க அடுத்த பகுதிக்கு வேன் புறப்பட்டது.
அப்போது மணி 7.50 இருக்கும். அந்த வழியாக ரயில் வருவதை அறிந்த கேட் கீப்பர் பங்கஜ் சர்மா, செம்மங்குப்பம் ரயில்வே கேட்டை மூட முயன்றார். அப்போது வேன் டிரைவர் சங்கர், ரயில் வருவதற்குள் கேட்டை கடந்து சென்றுவிடலாம் என நினைத்து கேட்டை மூடாதே என கூறினார்.
அதன்பேரில் கேட் கீப்பரும் கேட்டை மூடவில்லை. அதற்குள் ரயில் மிக அருகில் வந்தது. அந்த ரயில் விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை சென்று கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக ரயில் பள்ளி வேனின் முன்பகுதியில் மோதியது. இதில் வேன் தூக்கி வீசப்பட்டு நொறுங்கியது.
முன்னால் அமர்ந்திருந்த 6ம் வகுப்பு மாணவி, சாருமதி(11), மற்றும் 6ம் வகுப்பு மாணவன் நிமலேஷ்(11) ஆகியோர் அந்த இடத்திலேயே பலியானார்கள். வேன் சுமார் 30 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டது.
இதில் வேன் டிரைவர் சங்கர், மற்றும்4 மாணவர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு : விஸ்வேஸ், செழியன். இவர்கள் இருவரும் 10ம் வகுப்பு மாணவர்கள் மற்றும்பொறையூரை சேர்ந்த ரூபேஸ், ஜீவா ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
உடனடியாக அவர்கள் கடலூர் அரசு ஆஸ்பததிரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து காரணமாக மின்சார லைனிலும் சேதம் ஏற்பட்டது. விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும், அமைச்சர் கணேசன், மற்றும் கலெக்டர், எஸ்.பி. உள்ளிட்ட யஉயர் அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
கேட் கீப்பர் பங்கஜ் சர்மா பணியில் அலட்சியமாக இருந்ததாக கூறி அவரை தென்னக ரயில்வே சஸ்பெண்ட் செய்துள்ளது. அவரை டிஸ்மிஸ் செய்வது குறித்தும் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. விபத்தில் இறந்த மாணவன் நிவாஸ், மாணவி சாருமதி குடும்பத்துக்கு தலா ரூ-5 லட்சம் நிதி உதவி வழங்குவதாக அறிவித்த முதல்வர் ஸ்டாலின் அந்த குடும்பங்களுக்கு இரங்கல்தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்கவும், அவர்களுக்கு தலா ரூ-1 லட்சமும் வழங்க முதல்வர் உத்தரவிட்டார். இதுபோல பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேசும் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செழியன் என்ற 10ம் வகுப்பு மாணவம் உயிரிழந்தான். இதனால் பலி 3 ஆனது. ,இவன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உயிரிழந்தான்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி உள்பட பல்வேறு கட்சித்லைவர்களும் இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
விபத்து ஏற்படுத்திய ரயில் சிதம்பரம் அடுத்த கிள்ளை என்ற இடத்தில் நிறுத்திவைக்கப்பட்டது. திருவாரூரில் இருந்து மாற்று என்ஜின் சென்று அந்த ரயிலை இழுத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.