கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள பாப்பக்காப்பட்டி பஞ்சாயத்து குப்பனம்பட்டியை சேர்ந்தவர் வைரப் பெருமாள் மகன் விவசாயி அண்ணாதுரை வயது 55. இவரது மகள் தனலட்சுமி வயது 19. குடும்ப பிரச்சினை காரணமாக தனலட்சுமி நேற்று இரவு அருகிலுள்ள அவர்களது விவசாய பாசன கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.
இதனை அறிந்த தந்தை அண்ணாதுரை மகளைக் காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்துள்ளார். அப்போது அண்ணாதுரை மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
கிணற்றில் குதித்த அண்ணாதுரை தண்ணீரில் மூழ்கினார். சம்பவம் அறிந்து அங்கு சென்ற நள்ளிரவு சென்ற குளித்தலை தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர்.
கிணற்றின் சுவரை பிடித்துக் கொண்டு தண்ணீரில் கத்தளித்த தனலட்சுமியை உயிருடன் மீட்கப்பட்டனர். இறந்த நிலையில் அண்ணாதுரையை சடலமாக மீட்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற குளித்தலை போலீசார் சடலத்தை உடற்க்கூறு ஆய்விற்காக குளித்தலையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த குளித்தலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

