திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பொம்மிக்குப்பம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஏரி ஒன்று உள்ளது. மேலும் அதிக கன மழை வந்தால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொம்மிகுப்பம் ஏரி நிரம்பி விவசாயத்திற்கு பயன்பட்டு வந்த நிலையில் திடீரென ஏரியில் 5000கும் மேற்பட்ட மீன்கள் செத்து கரையோரம் மிதந்து கிடக்கின்றது. மேலும் இந்த ஏரியின் அருகாமையில் அரசு பள்ளி இயங்கி வருகிறது காலை மாலை என இருவேளையும் பள்ளி மாணவ மாணவிகள் சென்று வருகின்றனர். ஏரியில் மீன்கள் செத்து கிடந்ததால் அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசி வருகிறது ஆகையால் மாணவ மாணவிகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயகரமான சூழல் அங்கு நிலையை வருகிறது என தெரிவிக்கிறார்கள். ஆகவே பொம்மிகுப்பம் ஏரியில் இறந்து போன மீன்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் மற்றும் ஏரி முழுவதும் சுத்தம் செய்து தூர்வாரப்பட வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொம்மிகுப்பம் ஏரியில் செத்து கரையோரம் மிதக்கும் மீன்கள்… பொதுமக்கள் கோரிக்கை
- by Authour
