Skip to content

அடிச்சது உலகோப்பை.. தீப்தி சர்மாவுக்கு டிஎஸ்பி பதவி

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா, 2025 ICC மகளிர் ODI உலகக் கோப்பை தொடரில் சிறந்த செயல்பாட்டிற்காக ‘தொடர் நாயகி’ விருதைப் பெற்றார். இந்த வெற்றிக்குப் பிறகு, உத்தர பிரதேச அரசு அவருக்கு காவல்துறையில் துணை கண்காணிப்பாளர் (DSP) பதவியை அளித்துள்ளது. இது, ‘குஷால் கிலாடி யோஜனா’ (Kushal Kheladi Yojana) திட்டத்தின் கீழ், விளையாட்டு துறை மூலம் வழங்கப்பட்ட பெருமையான விருதாகும்.

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், முறடாபாத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் தீப்திக்கு DSP யூனிஃபார்ம் அளித்து வாழ்த்தினார். இந்த விருது, தீப்தியின் திறமையை அங்கீகரிக்கும் மாநில அளவிலான மிக உயர்ந்த மரியாதையாகும்.தீப்தி ஷர்மா, உத்தர பிரதேசத்தின் ஆக்ரா மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது இளம் வீராங்கனை. 2014-ல் இந்திய அணிக்கு அறிமுகமான அவர், சுழற்பந்து வீச்சு, பேட்டிங், ஃபீல்டிங் என அனைத்திலும் சிறந்து விளங்குகிறார்.

2025 உலகக் கோப்பையில், அவர் 9 போட்டிகளில் 215 ரன்கள் அடித்து, 22 விக்கெட்டுகள் வீழ்த்தி, தொடர் நாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார். இறுதியில் தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியாவின் முதல் சாம்பியன் பட்டம், அதில் தீப்தியின் 4 விக்கெட்டுகள் முக்கியமானது. அவரது சராசரி 27.64, இந்தியாவின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது. மேலும், ‘குஷால் கிலாடி யோஜனா’ திட்டம், உத்தர பிரதேசத்தில் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டமாகும்.

இதன் கீழ், தீப்தி DSP பதவி பெற்றார். முதல்வர் யோகி ஆதித்யநாத், “தீப்தியின் சாதனைகள் உத்தர பிரதேசத்திற்கு பெருமை. அவர் போல இளம் வீரர்கள் உந்துதல் தேட வேண்டும்” என்று பாராட்டினார். இந்த விருது, தீப்தியின் கிரிக்கெட் திறமையை அங்கீகரித்து, அரசு சேவையில் இணைக்கும் மாநில அளவிலான உயர்ந்த மரியாதையாகும். ஏற்கனவே, உலகக்கோப்பையை இந்திய அணி வெல்ல அவரும் முக்கியமான காரணமாக இருந்து வரும் நிலையில், ஏற்கனவே அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது . அந்த வகையில் இப்போது அவருக்கு DSP பதவியும் வழங்கப்பட்டுள்ள காரணத்தால் கூடுதலாக பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

error: Content is protected !!