பரமக்குடி தாலுகா எஸ்.அண்டக்குடி ஊராட்சியில் உள்ள இடத்தை, ராமநாதபுரம் நகர ஊரமைப்புத்துறையில் மனையிட அனுமதியை ஒருவர் பெற்றுள்ளார். அரசுக்கு உள்ளாட்சி மனை வரன்முறைப்படுத்தல் கட்டணமாக ரூ. 3,47,800 ஐ கடந்த மாதம் செலுத்தியுள்ளார். அந்த இடத்திற்கு உள்ளாட்சி அனுமதி பெற கடந்த வாரம் பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக பி.டி.ஓ., அன்புக்கண்ணனை சந்தித்து விவரம் கேட்டுள்ளார்.
அதற்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவனை (49) தொடர்பு கொள்ள கூறியுள்ளார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) இளங்கோவனை பார்த்து விவரம் கேட்ட போது ரூ. 1,00,000 லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இந்நிலையில் மனுதாரர் இளங்கோவனை பார்த்து விவரம் கேட்ட போது, அவர் ஏற்கனவே கூறியது போல், இன்று (டிச.11) 50,000 ஆயிரம் ரூபாயும், மீதி பணம் ரூ. 50,000 ஆயிரம், வரும் வெள்ளிக்கிழமை கொடுக்கவும் கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாமல், மனுதாரர் ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார்.
லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அறிவுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய பணம் ரூ.50,000 ஆயிரம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவனிடம் கொடுக்கும் போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

