கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 49 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கரூர் மாவட்ட திமுக சார்பில் மாவட்ட அளவிலான பெண்களுக்கான சிலம்ப போட்டியை இன்று முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.
நாளை ஆண்களுக்கான சிலம்பப் போட்டி நடைபெற உள்ளது.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சிலம்பப் போட்டியில் 14,17,19 வயது மற்றும் பொது பிரிவாக போட்டிகள் நடைபெற உள்ளது முதல் பரிசு 25 ஆயிரம் ரூபாய் மற்றும்

கோப்பை இரண்டாம் பரிசு 20 ஆயிரம் ரூபாய் மற்றும் கோப்பை மூன்றாம் பரிசாக 15 ஆயிரம் ரூபாய் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட உள்ளது.
போட்டியில் மொத்த பரிசாக 7,20,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.

சிலம்ப போட்டியில் கரூர் மாவட்டத்தைச் சார்ந்த ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் பங்கு பெற்றனர்.

