Skip to content

தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு:பிப். 11-ல் துணைத் தேர்தல் ஆணையர் தமிழகம் வருகை

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில், இதற்கான பணிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, இந்தியத் துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு வரும் 11-ஆம் தேதி தமிழகம் வருகிறார்.

தமிழகத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 17-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்தச் சூழ்நிலையில் தமிழகம் வரும் துணைத் தேர்தல் ஆணையர், இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் மற்றும் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரியுடன் விரிவான ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிப்ரவரி மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மே 10-ஆம் தேதியுடன் தற்போதைய சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைவதால், அதற்கு முன்னதாகத் தேர்தலை நடத்தி முடிக்கத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர். துணைத் தேர்தல் ஆணையரின் இந்த வருகை, தேர்தல் பணிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!