கோவை, பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை தாத்தூர் பிரிவு அருகே போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்து கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தை தணிக்கை செய்ததில் அதில் உரிமம் மற்றும் அனுமதி இன்றி பாறையை உடைக்கும் வெடிபொருளான டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்டவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதனை அடுத்து இருசக்கர வாகனத்தில் வந்த சேலம்

பகுதியைச் சேர்ந்த சிவா (40).செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (39) ஆகிய இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து சுமார் 125 கிராம் எடையுள்ள 178 ஜெலட்டின் குச்சிகள், 100 நோனால் டெட்டனேட்டர்கள், 7 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து ஆனைமலை காவல் நிலைய போலீசார் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

