திருப்பத்தூரில் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு முத்துமாரியம்மன் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்!. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய கோவில் நிர்வாகிகள். திருப்பத்தூர்மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ராமாக்கா பேட்டை காமராஜர் நகரில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் ஆலயம் செயல்பட்டு வருகிறது.
தினம்தோறும் 100-க்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் செய்து வரும் நிலையில், ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு முத்துமாரி அம்மனுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் செய்து 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அம்மனை வழிபட்டனர்.
இன்று ஆடி அமாவாசை முன்னிட்டு திருப்பத்தூர் ராமக்கா பேட்டை அடுத்து காமராஜ நகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் க்கு கருமாரி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் அனைவருக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.