தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள சேண்டாக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற 40 அடி உயர சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்று ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆலயத்தில் சிறப்பு ஹோமங்கள் வார்க்கப்பட்டன பின்னர் ஆஞ்சநேயருக்கு 200 லிட்டர் பால் அபிஷேகம் மற்றும் சந்தன அபிஷேகம் பஞ்சாமிர்தம் அபிஷேகம் மற்றும் புனித நீர் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஆஞ்சநேயருக்கு வடை மாலை வெற்றிலை மாலை துளசி மாலை வஸ்திரம் மாலை ஆகிய மாலைகள் அணிவிக்கப்பட்டு மகா தீப ஆராதனை நடைபெற்றது. ஆலயத்தில் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இன்று அனுமன் ஜெயந்தி முன்னிட்டு அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இருந்தும் ஆயிரம் கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி கும்பிட்டனர்.

