Skip to content

கரூர் கல்யாண வெங்கட்ரமண சாமி கோவில் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலயத்தில் மாசி மாத திருத்தேர் திருவிழா இன்று பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

“தென் திருப்பதி” என அழைக்கப்படும் கரூர் தான்தோன்றி மலை அருள்மிகு கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் மாசி மாத திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றத்துடன்

தொடங்கிய நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் ஸ்வாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

மாசி மாத திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று சிறப்பு அபிஷேகத்துடன் நடைபெற்றது. ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமிக்கு சிறப்பு பூஜைகள்

நடைபெற்ற பின்னர், ஆலய வாசலில் அலங்கரிக்கப்பட்டிருந்த திருத்தேரில் சுவாமி எழுந்தருளினார்.

இதனைத் தொடர்ந்து பக்தர்கள் “கோவிந்தா, கோவிந்தா” என முழக்கமிட்டபடி தேரின் வடத்தை பிடித்து இழுத்தனர். ஆலய வாசலில் இருந்து புறப்பட்ட திருத்தேர், ஆலயத்தை சுற்றி வலம் வந்து மீண்டும் நிலைக்கு வந்து சேர்ந்தது.

விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு துளசி, மஞ்சள், தீர்த்தம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

மேலும், திருத்தேர் விழாவை முன்னிட்டு தான்தோன்றி மலை சுற்றுவட்டார திருமண

மண்டபங்களில் அன்னதானம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று சந்திர கிரகணம் இருப்பதையடுத்து ஆலய நடை தற்காலிகமாக சாத்தப்பட்டு, மாலை மீண்டும் திறக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற உள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!