அரியலூர் நகரில் கவரத் தெருவில் உள்ள தேச மாரியம்மன் கோவிலுக்கு ஆண்டுதோறும் ஆடிப்பூரம் அன்று விழா எடுப்பது வழக்கம். இன்று ஆடிப்பூர தினத்தை முன்னிட்டு பக்தர்கள் அரியலூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக வந்தனர். தேச மாரியம்மன் க்கு வேண்டிக்கொண்ட பக்தர்கள் தீச்சட்டி
ஏந்தியும், 20 அடி, 15 அடி, 10அடி நீளமுள்ள அழகு குத்தியும், மயில் காவடி எடுத்தும், நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் சுமந்தும் முக்கிய வீதிகளின் வழியே சென்று கோவிலை அடைந்தனர். அங்கு பக்தர்கள் எடுத்து வந்த பாடல் மாரியம்மன் க்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மாரியம்மனுக்கு புத்தாடை மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.