Skip to content

மீண்டும் இணையும் தனுஷ் – மாரி செல்வராஜ் கூட்டணி…!..

  • by Authour

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இதுகுறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள பதிவில் தெரிவித்ததாவது.

“கர்ணன் படத்தின் நான்காவது ஆண்டினை கொண்டாடுவதில் மகிழ்ச்சி. கர்ணன் படத்துக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. எனது அடைப்பு படைப்புக்காக மீண்டும் தனுஷ் உடன் இணைவதை சொல்வதில் மகிழ்ச்சி. இது குறித்து நீண்ட நாட்களாக யோசித்துக் கொண்டிருந்தேன். இது உற்சாகம் தருகிறது.

 முதல் முறையாக ஐசரி கணேஷ் சார் உடன் இணைந்து பணியாற்றி உள்ளேன். இது சிறந்தவொரு அனுபவமாக இருக்கும். பேர் யுத்தம் வேர் விடத் தொடங்கியுள்ளது” என இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.கர்ணன் படத்துக்கு பிறகு தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் இணைந்து இந்தப் படத்தில் பணியாற்ற உள்ளனர். இந்த படம் ‘தனுஷ் – 56’ என இப்போதைக்கு அறியப்படுகிறது. இது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக உள்ளது ஆறாவது திரைப்படம். பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை உள்ளிட்ட படங்கள் வெளியாகி உள்ளன. அடுத்து பைசன் வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.
error: Content is protected !!