Skip to content

தருமபுரம் ஆதினத்தை மனிதர்கள் பல்லக்கில் சுமக்கும் விழா… கொடியேற்றம்..

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தை மே 19ம் தேதி மனிதர்கள் பல்லக்கில் சுமக்கும் பட்டணப் பிரவேச வைகாசி பெருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று நடைபெற்றது . மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் 11 நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழாவில் 11ஆம் நாள் விழாவாக மே 19-ஆம் தேதி தருமபுரம் ஆதினம் 27-வது சன்னிதானம் மாசிலாமணி சுவாமிகளை சிவிகை பல்லக்கில் அமரவைத்து மனிதர்கள் தூக்கிச்சென்று வீதியுலா நடைபெற்று பக்தர்களுக்கு ஆசி வழங்கும் சர்ச்சைக்குறிய பட்டண பிரவேசம் நடைபெற உள்ளது. இந்த விழாவின் கொடியேற்றம் ஞானபுரீஸ்வரர் ஆலயத்தில் இன்று நடைபெற்றது. கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தருமபுரம் ஆதீனகர்த்தர் முன்னிலையில் திருவிழாவின் ரிஷபக்கொடி ஏற்றப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
error: Content is protected !!