கரூர் மாவட்டம், வாங்கல் அருகில் உள்ள எல்லையூர் கிராம் வழியாக செல்லக்கூடிய பாப்புலர் முதலியார் வாய்க்கால் தூர் வாரும் பணிகளை கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி நீர்வளத்துறை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி…
எடப்பாடி பழனிச்சாமி இதுவரை எத்தனை வாய்க்காலை போய் நேரில் பார்த்தார். மேட்டூர் அணை திறக்கப்படும் போது மட்டும் வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை என பொத்தாம் பொதுவாக அறிக்கை வெளியிடுகிறார். அவர் சொல்லி தான் அரசு சார்பில் தூர்வாரும் பணி நடைபெறுவது போல சூழலை உருவாக்குவது போல் சொல்கிறார். இருக்கக்கூடிய சூழ்நிலையை பார்த்துவிட்டு ஆரோக்கியமான கருத்தை வெளியிடுவதுதான் ஒரு எதிர்க்கட்சித் தலைவருக்கு அழகாக இருக்கும்.
குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் மேற்கொண்ட பணிகளை பட்டியலிட்ட செந்தில்பாலாஜி, 2021-22 ஆம் ஆண்டில் 1 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு 10 பணிகள் நடைபெற்று முடிந்தது. 2022-23 ஆம் ஆண்டில் 1 கோடியே 32 லட்சம் நிதியில் 15 பணிகளும், 2023-24

ஆம் ஆண்டில் 4 கோடியே 8 லட்சம் நிதியில் 18 பணிகளும், 2024-25 ஆம் ஆண்டில் 2 கோடியே 76 லட்சம் நிதியில் 14 பணிகளும், 2025-26 ஆம் 4 கோடியே 31 லட்சம் நிதியில் எடுத்துக்கொள்ளப்பட்ட 24 பணிகளும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தூர்வாரும் பணிகள் சிறப்பாக நடைபெறுகிறது. விவசாயிகள் அதை பயன்படுத்தி வருகின்றனர். பணிகள் விடுபட்டு இருந்தாலும் விவசாயிகள் வைக்கும் கோரிக்கையை ஏற்று பணிகள் முன்னின்று நடத்தப்பட்டு வருகிறது.
கரூரை பொறுத்தவரை நிதியாதரங்கள் குறைவாக இருந்தாலும், சொந்த நிதியில் தூர்வாரும் பணிகளை செய்து வருகிறோம். வாய்க்கால் கரையோரங்களில் 117 கோடி மதிப்பில் கடந்த 4 ஆண்டுகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீர்வளத் துறையையும், பொதுப்பணித்துறையும் பொருத்தவரை கரூர் மாவட்டத்தில் மிக சிறப்பான பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.

