Skip to content

லப்பர் பந்து வெற்றிக்கு பிறகு தினேஷ் நடிக்கும் படம்…

யசோ எண்டர்டெயின்மெண்ட் சார்பில் டாக்டர் சத்யா முரளி கிருஷ்ணன் தயாரிக்க, இரட்டை வேடங்களில் தினேஷ் நடித்துள்ள கமர்ஷியல் படம், ‘கருப்பு பல்சர்’. இது வரும் 30ம் தேதி திரைக்கு வருகிறது. இயக்குனர் ராஜேஷ்.எம் படங்களில் உதவி இயக்குனராகவும், திரைக்கதை அமைப்பிலும் பணியாற்றிய முரளி கிரிஷ், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். மதுரையில் கருப்பு காளையுடன் வசிக்கும் ஒரு இளைஞன், சென்னையில் பல்சருடன் வாழும் ஒரு இளைஞன், திடீரென்று நேரில் சந்திக்கும்போது ஏற்படும் பிரச்னைகள் மற்றும் அதை எப்படி தீர்க்கின்றனர் என்பது கதை. ‘லப்பர் பந்து’ வெற்றிக்கு பிறகு மதுரை கிராமத்து இளைஞனாகவும், சென்னை மாடர்ன் இளைஞனாகவும் மாறுபட்ட இரட்டை வேடங்களில் தினேஷ் நடித்துள்ளார். அவரது ஜோடியாக ரேஷ்மா வெங்கட், மதுனிகா நடித்துள்ளனர். வில்லனாக பிரின்ஸ் அஜய் மற்றும் மன்சூர் அலிகான், சரவண சுப்பையா, கலையரசன் கண்ணுசாமி நடித்துள்ளனர். இன்பா பாடல்கள் எழுதி இசை அமைத்துள்ளார். பாஸ்கர் ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

error: Content is protected !!