சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள சென்னை இதழியல் கல்வி நிறுவனம், குறைந்த கட்டணத்தில் ஓர் ஆண்டு ஊடகவியல் கல்வியை(Diploma in Journalism) தொடங்கி உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் cij.tn.gov.in/en என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 10.8.25.
அச்சு, தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணைய ஊடகங்களில் செயல்படுவதற்கான பாடத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஊடகத்தில் சாதிக்க இதில் சேரலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.