Skip to content

டைரக்டர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம்… குவியும் வாழ்த்துக்கள்

இந்திய சினிமாவில் தரமான படங்களை கொடுத்துவரும் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. சென்னையில் அமைந்துள்ள சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தால் கவுரவ டாக்டர் பட்டத்திற்கு (Honoris Causa) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய திரையுலகில் அவரது மகத்தான சாதனைகளைப் பாராட்டும் விதமாக இந்த கவுரவம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டம், வரும் ஜூன் 14, 2025 அன்று நடைபெறவுள்ள சத்யபாமா பல்கலைக்கழகத்தின் 34-வது பட்டமளிப்பு விழாவில் வழங்கப்படவுள்ளது. சத்யபாமா பல்கலைக்கழகம் இதற்கு முன்பு பல துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கியுள்ளது. இந்த முறை, அட்லீயுடன் இணைந்து மற்ற துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்களும் இந்த விழாவில் கௌரவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, அண்ணா பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சந்திரயான் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை போன்றவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன. அந்த வரிசையில் இப்போது இயக்குனர் அட்லீக்கும் வழங்கவிருக்கிறது.

இந்த பல்கலைக்கழகம், தனது 34-வது பட்டமளிப்பு விழாவில், இயக்குநர் அட்லீயின் திரைத்துறை பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த கவுரவ டாக்டர் பட்டத்தை அறிவித்துள்ளது.  இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் அட்லீயின் ரசிகர்களும், திரையுலகினரும் தங்களது மகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!