திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த காவேரிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் தசரதன்( 35) இவர் அதே பகுதியில் சாலையோரம் அரசுக்கு சொந்தமான இடத்தில் மளிகைகடை வைத்து நடத்தி வருகிறார். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் துறைசார்ந்த அதிகாரிகளுக்கு மனு அளித்த நிலையில் கிராம நிர்வாக நிர்வாக அலுவலரும் நான்கு முறை வந்து அந்த இடத்தை அளவிடு செய்து கடையை அப்புறப்படுத்துமாறு தசரதனிடம் கூறி சென்றுள்ளார். அதனை கண்டு கொள்ளாத தசரதன் கடையை அகற்றாமல் உள்ளார்.
இந்த நிலையில் கடந்த நான்காம் தேதி புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு ஊர் பொதுமக்கள பெருமாள் சிலையை ஊர்வலமாக கொண்டு கொண்டு சென்றுள்ளனர்.
மேலும் சிலையை ஊர்வலமாக எடுத்து சென்றபோது சாலையோரம் தசரதன் வைத்துள்ள கடை இடையூறாக
இருந்துள்ளது. அதனை தொடர்ந்து ஊர் நாட்டாமை சத்தியசீலன் மற்றும் ஊர் பொதுமக்கள் தாசரதனிடம் பொது இடத்தில் கடை வைத்துள்ளதால் ஒவ்வொரு முறையும் இது போன்ற இடையூறு ஏற்படுவதாகவும், பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் அதனை அகற்றுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது ஆத்திரமடைந்த தசரதன் மற்றும் அவருடைய உறவினர்கள் இளங்கோ, அனுமுத்து,இராசன், லட்சாதிபதி ஆகியோர் இணைந்து ஊர் நாட்டாமை சத்தியசீலனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
காயமடைந்த சத்தியசீலன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் இது தொடர்பாக ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் இதுவரை இது தொடர்பாக யாரையும் போலீசார் கைது செய்யாததால் ஆத்திரமடைந்த ஊர் பொதுமக்கள் இன்று காவேரிப்பட்டிலிருந்து ஜோலார்பேட்டை செல்லும் சாலையில் அரசு பேருந்து, பள்ளி பேருந்து ஆகியவற்றை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜோலார்பேட்டை போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றன இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.