சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் நாளை (டிச.6) வழக்கம்போல் செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். மேலும் எந்த நாள் பாடவேளையில் பள்ளிகள் செயல்படும் என்பது பற்றியும் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
மழை காரணமாக நடப்பு வாரத்தில் தொடர்ந்து மூன்று நாள்கள் விடுமுறை விடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், பள்ளி மாணவ மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், டிச. 2ம் தேதி மழை விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் டிச. 6ம் தேதி சனிக்கிழமை பள்ளிகள் வழக்கம் போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை புதன்கிழமை பாடவேளையை பின்பற்றி பள்ளிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிட்வா புயல் காரணமாக, தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு டிச. 2, 3, 4 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இன்று மழை சற்று ஓய்ந்திருந்ததால், பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் நாளை பள்ளிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

