Skip to content

தீபாவளி பண்டிகை… சிறப்பு ரயில்களுக்கு டிக்கெட் முன்பதிவு.. தொடக்கம்

நடப்பாண்டு தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் மாதம் 20ம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட  உள்ளது. இதனையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பயணிகள் கடைசி நேர அலைச்சலை குறைக்கும் வையில் சிறப்பு ரயில்களுக்கான  டிக்கெட் முன்பதிவு 120 நாட்களுக்கு முன்னதாவே தொடங்கிவிடும். அதன்படி இன்று தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொட்ங்குகிறது.

இந்த ஆண்டு திங்கள் கிழமை தீபாவளி பண்டிகை என்பதாலும், அதற்கு முன்னதாக சனி , ஞாயிறு 2 நாட்களும் வார இறுதி நாட்கள் என்பதாலும் பெரும்பாலானோர் வெள்ளிக்கிழமை ( அக்.17) அன்றே சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கிவிடுவர்.  ஆகையால் டிக்கெட் முன்பதிவும் அக்டோபர் 16ம் தேதியில் (வியாழக்கிழமை) இருந்து தொடங்குகிறது. அதன்படி,  அக்.16ம் தேதிக்கான முன்பதிவு நேற்று  தொடங்கியது.

தொடர்ந்து அக்டோபர் 17ம் தேதி சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்புவோர் இன்றும்(ஆக.18), அக்டோபர் 18ம் தேதி பயணம் செய்ய விரும்புவோர் நாளைய தினமும் (ஆக.19) ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். அதேபோல் அக்டோபர் 20ம் தேதி தீபாவளியன்று பயணம் செய்ய விரும்புவோர்  வருகிற ஆக.21ம் தேதி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் தீபாவளி பண்டிகை முடிந்து  சொந்த ஊர்களில் இருந்து ஆக.21ம் தேதி (செவ்வாய் கிழமை) பெருநகருக்கு திரும்புவோர் வருகிற ஆக.22ம் தேதி டிக்கெட் முன்பதிவுசெய்யலாம்.  அதேபோல்  அக்டோபர் 22ம் தேதி பயணம் செய்வோர்  வருகிற ஆக.23ம் தேதியும்,  அக்டோபர் 23(வியாழக்கிழமை) பயணிக்க விரும்புவோர் வருகிற 25ம் தேதியும் என அடுத்தடுத்த நாட்களுக்கு  வருகிற ஆக.27ம் தேதி வரை டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  ரயில் கால அட்டவணைப்படி இன்று காலை 8 மணிக்கு அனைத்து வகுப்புகளுக்குமான டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது.

error: Content is protected !!