திமுக ஆட்சியை குறை சொல்லும் எண்ணம் எனக்கு இல்லை, மதுரை மக்கள் சொல்லக்கூடிய குறைகளை, கருத்துக்களை சட்டமன்றத்தில் பேசுகிறேன் என செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
அதிமுகவின் 54 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மதுரை கே.கே.நகரில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு கூறுகையில் “மதுரை மாநகராட்சியில் வரலாறு காணாத அளவிற்கு திமுக மாமன்ற உறுப்பினர்கள் வரி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளர்கள், முதலமைச்சர் உத்தரவின் பேரில் 5 மண்டல தலைவர்கள், 2 நிலைக்குழு தலைவர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். மண்டல தலைவர் ராஜினாமா விவகாரத்தை முடிக்க திமுக அரசு திட்டமிட்டது. ஆனால், அதிமுக அளித்த அழுத்தத்தின் காரணமாக மேயர் ராஜினாமா செய்துள்ளார். சொத்து வரி முறைகேட்டில் ஈடுபட்ட மாமன்ற உறுப்பினர்களின் சொத்து விபரங்களை ஆய்வு செய்ய வேண்டும். வாரிசு அரசியல், ஊழலை ஒழிப்பதற்காக எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கினார்.