தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக என் வாக்குச்சாவடி வெற்றி வாக்கு சாவடி என்ற அடிப்படையில் திமுக மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அதன் தொடர்ச்சியாக திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் தலைமையில் திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள், சௌந்தர பாண்டியன், பழனியாண்டி, ஸ்டாலின் குமார், கதிரவன் உள்ளிட்ட ஒன்றிய, பகுதி, பேரூர், கழக செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

