Skip to content

அரவக்குறிச்சி அருகே குடுகுடுப்பை அடித்து… வாக்கு சேகரித்த திமுக நிர்வாகி..

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளபட்டியில் குடுகுடுப்பை அடித்து பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக நிர்வாகி சேலம் மாவட்டத்தைச் சார்ந்த கோவிந்தன் திமுக தலைமை கழக பேச்சாளராக இருந்து வருகிறார்.

தற்போது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் தேர்தலுக்கு குடுகுடுப்பை அடித்து திமுகவிற்கு வாக்கு சேகரிப்பின் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து ஈரோட்டில் இருந்து கடந்த 17 தொடங்கி ஈரோடு. கோயமுத்தூர்.திருப்பூர்.குளித்தலை ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு தற்போது கரூர் அரவக்குறிச்சி பள்ளப்பட்டி பேருந்து நிலையத்தில் குடுகுடுப்பை அடித்து

பொதுமக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு பட்டார்.

வருகிற 2026 சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை 234 தொகுதிகளிலும் குடுகுடுப்பை பிரச்சாரம் செய்வதாக கூறியுள்ளார்.மீண்டும் திமுக ஆட்சி அமைவதற்கு வலியுறுத்தி மக்களிடம் வாக்கு சேகரித்த கோவிந்தன் செல்லும் இடமெல்லாம் திமுக அரசின் பல்வேறு நலத்திட்டங்களை கூறி குடுகுடுப்பை வாசித்து மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.

குடுகுடுப்பை அடித்து வினோத உடையணிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக நிர்வாகியை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.

error: Content is protected !!