வங்கிகளில் நகை கடன் பெற வேண்டுமெனில் நகை வாங்கிய ரசீது அல்லது தகுந்த ஆவணம் தர வேண்டும்,தனியாரிடம் வாங்கிய தங்க காசுகளுக்கு கடன் பெற முடியாது, ஏற்கனவே வாங்கி நகை கடனை முழுமையாக செலுத்தியவர்களுக்கு மட்டுமே புதிய நகை கடன் வழஙகப்படும், விவசாயிகளுக்கு நகையை புதுப்பித்து மீண்டும் கடன் பெறுவது தடை செய்யப்பட்டுள்ளது“ போன்ற புதிய நிபந்தனைகளை விதித்து ள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த உத்தரவுகளுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. திமுகவும் இதனை வன்மையாக கண்டித்துள்ளதுடன், வரும் 30ம் தேதி தஞ்சையில் திமுக விவசாய சங்கம், சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இதில் காவிரி டெல்டா மாவட்டங்களின் அனைத்து விவசாய சங்கங்களும் பங்கேற்கிறது.
தஞ்சை தலைமை தபால் நிலையம் எதிரில் 30ம் தேதி காலை இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. விவசாய அணியைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் நிர்வாகிகள் – கழக விவசாய அணித் தோழர்கள் மற்றும் அனைத்து விவசாய சங்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்திட வேண்டுமென திமுக விவசாய அணி செயலாளர் ஏகேஎஸ் விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.
