தி.மு.க முன்னாள் அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் 103-வது பிறந்தநாள் விழாவை இன்று அவரது உருவப்படத்திற்கு தி.மு.க சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டன.
அதன்படி தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
இதில் மத்திய மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் எம்எல்ஏ தலைமையில் பேராசிரியர் அன்பழகன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டன.
இந்த நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், மகேஸ் கிருஷ்ணசாமி, செல்வம், மாவட்ட அவைத்தலைவர் இறைவன், மாவட்ட பொருளாளர் அண்ணா, துணைச் செயலாளர்கள் புண்ணியமூர்த்தி, கனகவல்லி பாலாஜி, மாநகர செயலாளர் மேயர் சண் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, முன்னாள் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் உஷா , ஒன்றிய செயலாளர்கள் செல்லக்கண்ணு, அருளானந்தசாமி, செல்வராஜ், முருகையன், கார்த்தி, செல்வகுமார், அசோக்குமார், கௌதமன், பேரூர் செயலாளர் நாகராஜன், பகுதி செயலாளர்கள் மேத்தா, நீலகண்டன், கார்த்திகேயன் மற்றும் பல்வேறு அணி நிர்வாகிகள் , உள்ளாட்சித் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

