புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் எண்ணை ஊராட்சி மேலப்பட்டி பகுதியில்
கழக இளைஞரணிச் செயலாளரும் தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளினை முன்னிட்டு, அன்னவாசல் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற, வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் வழங்கும் விழா மற்றும் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி துவக்கி வைத்தார். இதில்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .இந்நிகழ்வில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் கே.கே.செல்லபாண்டியன்அன்னவாசல் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கே.எஸ்.சந்திரன் மற்றும் திமுக மாநில- மாவட்ட- ஒன்றிய- நகர பேரூர் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

